பொள்ளாச்சியில் மீண்டும் கொடூரம்.. 16 வயது மாணவியை துஷ்பிரயோகம் செய்த கும்பல்

Report Print Raju Raju in இந்தியா

பொள்ளாச்சியில் 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக 9 பேரை பிடித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் ஒரு கும்பல், இளம் பெண்களை ஏமாற்றி பலாத்காரம் செய்து, அதனை வீடியோ படமாக எடுத்து மிரட்டி பணம் பறித்ததாக பிப்ரவரி மாதத்தில் வழக்கு ஒன்று பதிவுசெய்யப்பட்டது.

இதையடுத்து இந்த வழக்கில் சபரீஷ், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார் என நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த விவகாரம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியானதையடுத்து மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியும் கோபமும் எழுந்தன.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

கடந்த 4-ம் திகதி ஆண் நண்பருடன் வெளியில் சென்ற 16 வயது சிறுமியை காணவில்லை என்று அவரது பெற்றோர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பொலிசார் விசாரணையை தீவிரப்படுத்தினார்கள்.

இதை தொடர்ந்து அந்த சிறுமியை கும்பல் ஒன்று பலாத்காரம் செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியாகியுள்ளது.

தீவிர விசாரணைக்கு பின்னர் சிறுமியை மீட்ட காவல்துறையினர், இது தொடர்பாக 9 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers