50 பேருடன் பாலத்தை உடைத்துக் கொண்டு வாய்க்காலில் பாய்ந்த பேருந்து: 29 பேர் பலி

Report Print Basu in இந்தியா

இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் 50 பேருடன் பயணித்த பேருந்து, வாய்க்காலில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்விபத்தில் 29 பலியாகியுள்ளனர்.

யமுனா எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் ஆக்ராவிற்கு அருகே இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து லக்னோவிற்கு பயணித்த அவத் டிப்போக்கு சொந்தமான டபுள் டக்கர் பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

50 பேருடன் பயணித்த பேருந்து, யமுனா எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில், ஆக்ரா அருகே சாலையின் தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு 15 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது.

தகவல் அறிந்த சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார், பேருந்தில் சிக்கி தவித்த பயணிகளை மீட்டுள்ளனர். இதில், 29 பேர் பலியான நிலையில், பலர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.

விபத்தில் சிக்கி உயிரிழந்த குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து விதமான உதவிகளை வழங்குமாறு உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

உயிரிழ்ந்தவர்களின் குடும்பதினருக்கு ரூ. 5 லட்சம் வழங்கப்படும் என உத்தர பிரதேச சாலைப் போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...