கண்களை மூடி நீதிமன்ற வளாகத்தில் தியானத்தில் மூழ்கிய நிர்மலாதேவி! எதற்கு தெரியுமா?

Report Print Abisha in இந்தியா

ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்திலிருந்து வெளியேற மறுப்பு தெரிவித்து கண்களை மூடிக் கொண்டு தியானம் மேற்கொண்டு வருகிறார் நிர்மலாதேவி.

அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் நிர்மலாதேவி. இவர் அங்குள்ள தேவாங்கர் கலைக் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் இவர் மதுரை பல்கலைக்கழக அதிகாரிகளின் ஆசைக்கு இணங்குமாறு அவரிடம் பயிலும் மாணவிகளை மூளைச்சலவை செய்தார். இதுதொடர்பான ஆடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து கடந்த ஆண்டு ஏப்ரல் 16-ஆம் திகதி கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பெயரில் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இச்சம்பவம் குறி வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.

இவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டு நீண்ட நாட்கள் சிறை தண்டனைக்கு அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

எனினும் நிர்மலாதேவி பல முறை ஜாமீன் கோரி விண்ணப்பித்திருந்த நிலையில் அவரது மனுக்கள் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வந்தன.

பின் அவருக்கு பல நிபந்தனையுடன் கூடிய ஜாமீனை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கியது.

இந்த நிலையில் 11 மாத சிறைவாசத்துக்கு பிறகு மார்ச் மாதம் சிறையிலிருந்து வெளியே வந்தார் நிர்மலா தேவி. அவ்வப்போது வழக்கு விசாரணைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜராகி வருகிறார்

இது தொடர்பாக இன்றைய தினம் நிர்மலா தேவி ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். வழக்கு விசாரணை நடைபெற்று முடிந்த நிலையிலும் நீதிமன்றத்தை விட்டு வெளியேற அவர் மறுப்பு தெரிவித்ததுடன், தன் கணவரும், உறவினர்களும் வந்து தன்னை அழைத்து செல்ல வேண்டும் என கண்களை மூடிக் கொண்டு தியானத்தில் ஈடுபட்டு வருகிறார். இதனால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகின்றது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...