வீட்டில் தூங்கி கொண்டிருந்த தம்பதி... இரவில் திடீரென கண்விழித்த போது அதிர்ந்த கணவன்

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் இரவில் கணவர் நண்பருடன் ஓட்டம் பிடிக்க முயன்ற மனைவியை கணவன் தடுத்து நிறுத்திய நிலையில் ஆத்திரமடைந்த மனைவி கணவன் வீட்டை தீயிட்டு கொளுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தபிரதேச மாநிலத்தில் உள்ள புத்தா கிராமத்தில் ஒரு தம்பதி வசித்து வருகின்றனர்.

தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ள நிலையில் கணவரின் நண்பருடன் மனைவிக்கு தொடர்பு ஏற்பட்டது.

இது தொடர்பாக கணவன், மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று தம்பதி வீட்டில் படுத்து தூங்கி கொண்டிருந்தனர்.

அப்போது இரவு 10.30 மணிக்கு மனைவி நைசாக எழுந்து காதலனுடன் ஓட்டம் பிடிக்க முயன்றார்.

ஆனால் கண்விழித்து பார்த்து அதிர்ந்த கணவன் மனைவி செல்வதை தடுத்தார். இதனால் ஆத்திரமடைந்த மனைவி வீட்டுக்கு தீவைத்தார்.

தீயானது மளமளவென அருகில் இருந்த வீடுகளுக்கும் பரவியது. பின்னர் ஊர் மக்கள் சேர்ந்து தீயை அணைத்தனர். இதில் மூன்று பேருக்கு காயம் ஏற்பட்டது.

இது தொடர்பாக பொலிசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் பொலிசார் மனைவியை கைது செய்தனர்.

இதனிடையில் மாடுகளை கொன்ற வழக்கு ஏற்கனவே கணவர் மீது பதியப்பட்டுள்ள நிலையில் அவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...