தமிழகத்தை உலுக்கிய கொலை வழக்கில் சரவணபவன் ராஜகோபாலுக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு.!

Report Print Abisha in இந்தியா

2001 ஆம் ஆண்டு தமிழகத்தை உலுக்கி பிரின்ஸ்சாந்தகுமார் கொலைவழக்கில் சரவணபவன் ஹொட்டல் உரிமையாளர் ராஜகோபால் ஆயுள் தண்டனைக்கு சரணடையும் அவகாசம் கேட்டு தாக்கல் செய்த மனுவில் உடனே சரணடைய உத்தரவிடப்பட்டுள்ளது.

சரவணபவன் ஹோட்டல் உரிமையாளர் ராஜகோபால், பிரின்ஸ் என்பவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு விசாரணையில் ராஜகோபால் உள்பட 6 பேருக்கு பூவிருந்தவல்லி நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்திருந்தது. அதை எதிர்த்து அவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அவர் ஜூலை 7ம் திகதிக்குள் சரணடைய வேண்டும் என்றும் நீதிமன்றம் கெடு விதித்தது. அந்த கெடு ஜூலை 7ஆம் திகதியுடன் முடிவடைந்தது.

இந்நிலையில் அவர் நீதிமன்த்தில் ஆஜராகவில்லை. மேலும், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர் கடந்த 4ஆம் திகதி முதல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், எனவே சரணடைய கால அவகாசம் கோரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அவர் உடனே ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers