திருமணமான 26 நாட்களில் கணவரின் குணத்தை அறிந்து அதிர்ந்த மனைவி.. பின்னர் நடந்த விபரீதம்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் திருமணம் ஆகி 26 நாட்களே ஆன நிலையில் புதுப்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மன்னார்க்குடியை சேர்ந்தவர் பிரகாஷ் (37). இவரும் நந்தினி (28) என்ற பெண்ணும் 5 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் ஜூன் 16-ஆம் திகதி பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர்.

இந்நிலையில் திருமணமான சில நாட்களிலேயே புதுமணத்தம்பதி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் நந்தினி வீட்டினர் வாங்கி கொடுத்த மோட்டார் சைக்கிளை பிரகாஷ் விற்க முயன்றார். இதனால் பிரகாசுக்கும், நந்தினிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

உயிருக்கு உயிராக காதலித்த பிரகாஷ் இவ்வளவு மோசமான குணங்களை கொண்டவரா என நினைத்து நந்தினி அதிர்ச்சியடைந்தார்.

இதையடுத்து வாழ்க்கையில் விரக்தியடைந்த நந்தினி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவலறிந்த பொலிசார் சம்பவ இடத்துக்கு வந்து நந்தினி சடலத்தை கைப்பற்றிவிட்டு இது குறித்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்