இரவு நேரத்தில் பெண்களுடன் நெருக்கம்... கையும் களவுமாக சிக்கிய அதிகாரியின் வைரல் புகைப்படம்

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் அரசு அதிகாரி ஒருவர் இரவு நேரங்களில் பெண்களை அழைத்து வந்து அவர்களுடன் நெருக்கமாக புகார் வந்த நிலையில், பொலிசார் அவரை கையும் களவுமாக பிடித்த புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தின் தேசிய கிராமப்புற வாய்ப்பு உறுதி திட்டத்தில் மாவட்ட அளவிலான அதிகாரியாக மாணிக்கியாராவ் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார்.

இவர் வேலை நேரம் போக, இவர் இரவு நேரங்களில், ஜின்னாராம் மண்டல தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட அலுவலகத்தில் பெண்களுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.

இதைக் கண்ட அங்கிருந்த மக்கள் மற்றும் சிலர் மாணிக்கியாராவ் பற்றி பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

ஆனால் பொலிசார் அவரை கையும், களவுமாக பிடிக்க வேண்டும் என்பதற்காக, செய்தியாளர்களுடன், பொலிசார் ஜின்னாராம் மண்டல தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட அலுவலகத்திற்கு சம்பவ தினத்தன்று இரவு நேரம் சென்றுள்ளனர்.

அப்போது அங்கு ராய்கோடூ மண்டலத்தில் கள உதவியாளராக வேலை செய்யும் லட்சுமியுடன் அவர் நெருக்கமாக இருப்பதற்காக வரவழைத்துள்ளார்.

ஆனால் பொலிசார் மற்றும் செய்தியாளர்கள் வருவதைக் கண்ட, இவர் உடனடியாக லட்சுமியை அங்கிருக்கும் கட்டிடத்தின் மேல் ஏற்றிவிட்டு ஒளிந்து கொள்ளும் படி கூறியுள்ளார்.

பொலிசாரோ அங்கிருந்த அலுவலகத்தின் கட்டிங்கள் மற்றும் மேலே ஏறி தேடிய போது, பதுங்கி இருந்த லட்சுமியை பிடித்து கீழே இறங்கியுள்ளனர்.

இந்த சம்பவங்கள் அனைத்தையும் செய்தியாளர் புகைப்படமாக எடுத்ததால், இந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது, மேலும் கையும், களவுமாக சிக்கிய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...