ஏடிஎம்மில் பணம் எடுக்க சென்ற நபருக்கு காத்திருந்த அதிர்ஷ்டம்... ஆனால் அவர் செய்த நெகிழ்ச்சி செயல்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் ஏடிஎம் மையத்திற்கு பணம் எடுக்க சென்ற நபருக்கு பணம் எடுப்பதற்கு முன்னே 10000 ஆயிரம் ரூபாய் வந்ததால், அதை எடுத்து அவர் செய்த செயல் பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது.

சென்னை அண்ணாநகர் அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த ராமச்சந்திரன்.

58 வயதான இவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு அருகிலிருக்கும் ஏடிஎம் மையத்திற்கு பணம் எடுக்கச் சென்றுள்ளார்.

அப்போது, அவருக்கு முன்னால் நின்றிருந்த நபர், பணம் எடுக்க சென்றபோது பணம் வரவில்லை. இதனால் அவர் அங்கிருந்து புறப்பட்ட பின்பு, ராமச்சந்திரன் சென்று தனது ஏடிஎம் கார்டை மெஷினில் செலுத்துவதற்கு முன், அதிலிருந்து ₹10 ஆயிரம் ரூபாய் வந்துள்ளது.

இதைக் கண்ட அவர் பணத்தை எடுத்துச் செல்லாமல், அதை ஜெ.ஜெ. நகரில் உள்ள சம்மந்தப்பட்ட வங்கி மேலாளரிடம் ஒப்படைத்தார்.

அதற்கு வங்கி மேலாளர், பணத்துக்குரிய ஆதாரம் தரமாட்டேன் என்று தெரிவித்தார். இதனால், ராமச்சந்திரன் வடபழனியில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம் நிறுவனத்திற்கு சென்று பணத்தை கொடுத்தபோது, அவர்களும் வாங்க மறுத்துள்ளனர்.

பின்னர், இதுகுறித்த புகாரின் பேரில் ஜெ.ஜெ.நகர் பொலிசார் வழக்கு பதிவு செய்து, ஏடிஎம்மில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.

அப்போது, பணத்தை தவறிவிட்ட நபர் ஜெ.ஜெ.நகர் பகுதியை சேர்ந்த பத்மநாதன் (58) என்று தெரியவந்தது.

இதையடுத்து, ராமச்சந்திரனிடம் இருந்து ₹10 ஆயிரத்தை வாங்கி பத்மநாதனிடம் பொலிசார் ஒப்படைத்தனர். நேர்மையாக செயல்பட்ட ராமச்சந்திரனை பொலிசார் பாராட்டியதுடன், அவருக்கு சமூகவலைத்தளங்களிலும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...