உணவு விடுதி இடிந்த விபத்தில் சிக்கிய 35 பேர்... மீட்பு நடவடிக்கை துரிதம்: 2 சடலங்கள் மீட்பு

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவின் இமாச்சலப்பிரதேசம் மாநிலத்தில் உணவகம் ஒன்று இடிந்து விழுந்த விபத்தில் ஏராளனான ராணுவ வீரர்கள் உள்பட 35 பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மீட்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இடிபாடுகளில் இருந்து 2 சடலங்கள் மீட்கப்படுள்ளன.

இமாச்சலப்பிரதேசத்தின் சோலான் மாவட்டத்தில் குமார்ஹட்டி என்ற பகுதி அமைந்துள்ளது.

மலைப்பாங்கான இப்பகுதியில் பிரபல உணவகம் ஒன்று இயங்கி வந்தது. இந்த உணவகத்திற்கு ஏராளமான ராணுவ வீரர்கள் நிரந்தர வாடிக்கையாளர்களாக உள்ளனர்.

இந்நிலையில், இந்த உணவகம் அமைந்துள்ள கட்டிடம் இன்று மாலை திடீரென்று இடிந்து விழுந்த விபத்தில் 30 ராணுவ வீரர்கள் உள்பட 35-க்கும் அதிகமானவர்கள் சிக்கியுள்ளனர்.

தகவலறிந்து விரைந்து வந்த மீட்புப்படையினர் இரு சடலங்கள் மற்றும் சுமார் 20 பேரை உயிருடம் மீட்டுள்ளனர். மீதமுள்ளவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து அங்கு நடைபெற்று வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்