2 வயது மகளுடன் மாடியில் இருந்து குதித்த பெண்: வெளியான சோகப் பின்னணி

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவின் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் குழந்தையுடன் பெண் ஒருவர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

தன்னை நிகழ்ச்சி ஒன்றுக்கு அழைத்து செல்ல கணவன் மறுத்ததாலையே குழந்தையுடன் அவர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

2 வயது கைகுழந்தையுடன் மாடியிலிருந்து கீழே குதித்த அவர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.

அவரது இரண்டு வயதுப் பெண் குழந்தை காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறது.

குறித்த பெண்ணின் உடல்பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இவரின் இந்த செயலுக்கு அந்த பெண்ணின் கணவர் தான் காரணமா என்று காவல்துறையினர் விசாரணை தொடங்கியுள்ளனர்.

முதல்கட்ட விசாரணையில், உயிரிழந்த பெண், அவர் கணவரிடம் நிகழ்ச்சி ஒன்றுக்கு அழைத்துச்செல்லுமாறு கேட்டுள்ளார்.

அதற்கு அவரது கணவர் மறுப்புதெரிவித்துள்ளார். இதனால் மனதளவில் பாதிக்கப்பட்ட அந்த பெண், தற்கொலை செய்யும் மனநிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

அவர்கள் இருவரும் மகிழ்ச்சியான தம்பதிகளாக்கத்தான் வாழ்ந்துள்ளனர். அவர்கள் அண்மையில் இலங்கைக்கு சுற்றுலா சென்று திரும்பியதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers