ஒருவரின் சடலத்தை வாங்க வந்த மூன்று மனைவிகள்...! லீலைகளின் மன்னன் செய்த வேலை

Report Print Abisha in இந்தியா

புதுச்சேரியில் ஒருவரின் சடலத்தை வாங்க மூன்று பெண்கள் தாங்கள் தான் மனைவி என்று வந்த நிலையில் பொலிசார் குழப்பத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் விழிபிதுங்கி போயினர்.

தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த ராஜா என்ற 30 வயது அழகுக் கலை நிபுணர். இவர் நேச்சுரல்ஸ் நிறுவனத்தில் அழகுக் கலை நிபுணராக பணி செய்து வந்துள்ளர். இந்நிலையில், அவர் தனது மாமன் மகள் சத்தியா என்பவரை காதல் வலையில் வீழ்த்தி திருமணம் செய்து கொண்டுள்ளார். அவருக்கு இரு குழந்தைகள் இருக்கும் நிலையில், தேனிக்கு பணி மாறுதல் பெற்று சென்றுள்ளார் ராஜா.

அங்கு தனலெட்சுமி என்ற பெண்ணை காதல் வலையில் வீழ்த்தி உள்ளார். அவரை 2 வதாக திருமணம் செய்து குடும்பம் நடத்தினார். அவருக்கும் 2 குழந்தைகள் உள்ள நிலையில், மதுரைக்கு பணி மாறுதல் வந்துள்ளது.

அங்கு தாய் தந்தையரை இழந்து தனியாக வசித்து வந்த காவ்யா என்ற பெண்ணை காதலித்து 3-வதாக சேர்த்துக் கொண்டார். இவரது மன்மத லீலைகள் தெரிந்ததால் மற்ற 2 மனைவிகளும் இவரிடம் தொடர்ந்து சண்டையிட்டு வந்துள்ளனர். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆன தகவல் 3 வது மனைவிக்கு தெரியாமல் இருந்துள்ளது.

இந்த நிலையில், நேச்சுரல்ஸ் நிறுவனம் ராஜாவை புதுச்சேரிக்கு இடமாற்றம் செய்துள்ளது. அங்கு தனியாக அறை எடுத்துத் தங்கியவர் தனது 3 வது மனைவியை குடித்தனம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். தன்னை திருமணம் செய்தால்தான் வருவேன் என்று அவர் நிபந்தனை விதித்துள்ளார் அவர்.

இந்நிலையில் மற்ற இரு மனைவிகளும் இவருடன் தொடர்ந்து சண்டையிட்டு வந்துள்ளனர். இவ்வாறு தொடர்ந்து வந்த நிலையில் மனம் உடைந்த அவர் தற்கொலை செய்துள்ளார்.

தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் ராஜாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அப்போது அவரது செல்போனை கைப்பற்றி உறவினர்களின் தொலைபேசி எண்களைத் தேடியுள்ளனர். அதில் மனைவி 1, மனைவி 2, மனைவி 3 என்று குறிப்பிடப்பட்டிருந்ததால், அவரது மனைவியின் 3 செல்போன் எண்கள் என்று கருதி காவல்துறையினர் தகவல் தெரிவித்த நிலையில், காலையில் குழந்தைகளுடன் 3 பேரும் தாங்கள் தான் மனைவி என்று வந்துள்ளனர். இதனால் குழப்பம் அடைந்த கால்துறையினர் மூன்று பேரிடமும் விசாரணை மேற்கொண்டதில் உண்மை தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், 3 பேரும் கணவர் ராஜாவின் சடலத்தை தங்களிடம் தான் தரவேண்டும் என்று கோரிக்கைவைத்து போராட்டத்தில் குதித்தனர். 3 வது மனைவி காவ்யா 19 வயது பெண் என்பதாலும் ஆதரவுக்கு வேறு யாரும் இல்லாததாலும் அவரது எதிர்காலம் கருதியும் போலீசார் எச்சரித்து அனுப்பிவைத்தனர்.

முதல் மனைவி உயிரோடு இருக்கும்போது, அவரது அனுமதியின்றி 2 வது மனைவியை திருமணம் செய்ய சட்டத்தில் இடமில்லை என்பதால், கணவரின் சடலத்தை பெற்றுச்செல்ல முதல் மனைவியே தகுதியானவர் என்ற அடிப்படையில் ராஜாவின் சடலம் மாமன் மகளான சத்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers