என் கணவரின் உடையை நான் அணிவேன்..கண்ணீர் காயவில்லை.. இளம் மனைவி உருக்கம்

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் விமான விபத்தில் போர் விமானி உயிரிழந்த நிலையில் அவர் மனைவி கணவரின் உடையை அணிந்து அவர் பணியை தொடர்வேன் என உருக்கமாக கூறியுள்ளார்.

பெங்களூரில் உள்ள உள்ள எச்ஏஎல் விமான நிலையத்தில் கடந்த பிப்ரவரி 1ம் திகதி காலை 10 மணியளவில் இந்திய விமானப்படையின் மிராஜ் 2000 ரக போர் விமானம் விபத்துக்குள்ளானது.

விமானமானது தரையை நெருங்கியபோது 2 விமானிகளும் வெளியே குதித்தனர்.

இதில் பலத்த காயமடைந்த விமானி சித்தார்த் நேகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மற்றொரு விமானி சமீர் அப்ரால், பலத்த காயமடைந்தார். ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார்.

உயிரிழந்த சமீர் அப்ராலின் மனைவி கரீமா அப்ரால் ஆவார். இவர் போர் விமானிக்கான நேர்முக தேர்வில் பயிற்சிப் பெற்றுள்ளார். இவர் விமானப்படை அகாடமியில் அடுத்த ஆண்டு சேரவுள்ளார்.

கரீமா அப்ரால் கூறுகையில், என் கண்ணீர் இன்னமும் காயவில்லை. ஒரு கோப்பை தேனீரை கையில் கொடுத்தப்படி அவரை நாட்டுக்காக சேவை புரிய அனுப்புவேன்.

என் கணவரின் வாழ்க்கை பணியில் எப்படி இருந்தது என்பதை காண விரும்பினேன்.

அவர் அணிந்த சீருடையை நான் அணிவது என்னை மிகவும் ஊக்கப்படுத்தும். நிச்சயம் விரைவில் அணிவேன் என உருக்கமாக கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers