கோயில் வளாகத்தில் மூன்று பேரின் தலைகள் துண்டிப்பு.. நரபலி கொடுக்கப்பட்டதா? அதிர வைத்த சம்பவத்தின் பின்னணி

Report Print Kabilan in இந்தியா

இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் 3 பேரின் தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் அனந்தபுரத்தை அடுத்துள்ள கிராமம் கொத்திகோட்டா. இந்த கிராமத்தில் மிகவும் பழமையான சிவன் கோயில் ஒன்று உள்ளது.

இதன் அருகே இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆணின் தலைகள் துண்டிக்கப்பட்டு கிடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொலை செய்யப்பட்டவர்கள் அதே சிவன் கோயிலில் பூஜை செய்யும் பணிகளில் ஈடுபட்டு வந்த சிவராம் மற்றும் அவரது சகோதரி கமலம்மா என்பது தெரிய வந்தது.

இவர்களுடன் பெங்களூருவைச் சேர்ந்த லட்சுமியம்மாள் என்பவரும் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. அவரும் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், இதுதொடர்பாக தகவல் அறிந்த பொலிசார் கோயிலுக்கு விரைந்தனர்.

கோயில் வளாகத்தில் அவர்கள் ஆய்வு மேற்கொண்டபோது, கோயிலுக்கு அருகே பூஜை நடத்தப்பட்டிருப்பதையும், சிவலிங்கத்தின் மீது ரத்தக் கறை இருந்ததையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அத்துடன் கோயில் வளாகத்திலும் ரத்தம் தெளிக்கப்பட்டிருப்பதாக தெரிந்தது.

புதையல் இருப்பதாக கருதி யாரேனும் மூன்று பேரையும் நரபலி கொடுத்தார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்