பெண் சபலத்தால் வீழ்ந்த சரவணபவன் ராஜகோபால் உடல்நிலை கவலைக்கிடம்... நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Report Print Raju Raju in இந்தியா

பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற ராஜகோபால் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ள நிலையில் அவரை தனியார் மருத்துவமனையில் சேர்க்க உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

ஜீவஜோதி என்ற பெண்ணை மூன்றாவதாக மணக்க விரும்பிய சரவணபவன் ஹொட்டல் உரிமையாளர் ராஜகோபால் அதற்கு தடையாக இருந்த அவர் கணவர் பிரின்ஸ் சாந்தகுமாரை கொலை செய்தார்.

இந்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள 72 வயதான ராஜகோபால் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் அவர் உடல் நலம் கவலைக்கிடமாக உள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனிடையில் ஸ்டான்லி மருத்துவமனையில் போதிய வசதி இல்லை என ராஜகோபால் மகன் உயர்நீதிமன்றத்தில் தனியார் மருத்துவமனையில் மாற்றக்கோரி மனுதாக்கல் செய்திருந்தார்.

அதை தொடர்ந்து ராஜகோபாலை தனியார் மருத்துவமனைக்கு மாற்றி சிகிச்சை தர உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers