சரிந்து விழுந்த நான்கு மாடி கட்டடம்.. உயிருடன் புதைந்த 40 பேர்; மும்பையில் துயரம்

Report Print Basu in இந்தியா

இந்தியாவின் வர்த்தக மையமான மும்பையில் நான்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் 12 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.

டோங்ரியில் டண்டெல் தெருவில் உள்ள கேசர்பாய் கட்டடம் இடிந்து விழுந்துள்ளது. கட்டடத்தின் இடிபாடுகளில் 40 க்கும் மேற்பட்டோர் சிக்கியிருப்பதாக அஞ்சப்படுகிறது. தகவல் அறிந்த சம்பவயிடத்திற்கு விரைந்துள்ள தீயணைப்பு படை மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், தீவிரமாக மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மழை தொடர்ந்து பொழிந்து வரும் நிலையில், கட்டடம் சரிந்து விழுந்ததில் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் காயமடைந்தவர்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

இந்த கட்டடம் சமூக வீட்டுவசதி திட்டத்தின் ஒரு பகுதியாக, உள்ளூர் வீட்டுவசதி ஆணையத்தால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. பல பாழடைந்த கட்டிடங்களைக் கொண்ட இப்பகுதி சமீபத்திய வாரங்களில் கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதே இந்த சரிவுக்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers