இது ஜனநாயக நாடு.. சூர்யா கருத்து தெரிவித்ததில் தவறில்லை! அன்புமணி ராமதாஸ் ஆதரவு

Report Print Kabilan in இந்தியா

புதிய கல்விக் கொள்கை குறித்து நடிகர் சூர்யா தெரிவித்த கருத்தில் தவறில்லை என பா.ம.கவின் அன்புமணி ராமதாஸ் ஆதரவு தெரிவித்துள்ளார்.

நடிகர் சூர்யா சமீபத்தில் புதிய கல்விக் கொள்கை குறித்து விமர்சித்தார். அவரது கருத்துக்கு பா.ஜ.க தரப்பில் எதிர்ப்புகள் எழுந்தாலும், பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் தனது ஆதரவை சூர்யாவுக்கு அளித்துள்ளார். இந்நிலையில், பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், ‘புதிய கல்விக் கொள்கை குறித்து ஆராய்ந்து தீர்வு காண, பா.ம.க சார்பில் தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ள நீட் தேர்வுக்கும் எக்ஸிட் தேர்வுக்கும் பெரிய வித்தியாசமில்லை.

புதிய கல்விக் கொள்கை குறித்து சூர்யா கருத்து தெரிவித்ததில் தவறில்லை. இது ஜனநாயக நாடு. கருத்து தெரிவிக்கும் உரிமை அனைவருக்கும் உள்ளது’ என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers