இளம்பெண்ணுக்கு வந்த திருமண ஆசை.. வெளிநாட்டு நபரிடம் ஏமாந்தது எப்படி? அதிரவைக்கும் பின்னணி

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் திருமணம் செய்ய மாப்பிள்ளையை காட்டுவதாக கூறி இளம்பெண்ணிடம் லட்சக்கணக்கில் பணத்தை ஏமாற்றிய நைஜீரியாவை சேர்ந்த நபர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜார்கண்டை சேர்ந்த 25 வயது இளம் பெண் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்த நிலையில் திருமண இணையதளத்தில் தன்னுடைய பெயர், விவரத்தை பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில், அந்த இணையதளத்தில் கொடுத்த விவரங்களை வைத்து ஒருவர், அப்பெண்ணுக்கு போன் செய்தார்.

அப்போது அவர், உங்கள் தகுதிக்கு ஏற்ற மாதிரி அழகான, நன்கு சம்பாதிக்கும் மாப்பிள்ளை ஒருவர் உள்ளார் என்றும், மாப்பிள்ளையின் படங்களை அனுப்பி வைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இதற்கு ரூ.1.37 லட்சம் பணம் செலுத்த வேண்டும் என்றும் அந்த நபர் கூறியுள்ளார்.

இதனை நம்பிய அந்த இளம்பெண், மாப்பிள்ளையின் புகைப்படம் மற்றும் விவரங்களை அனுப்பி வைக்கும்படி கேட்டுள்ளார். அதன்படி அந்த நபர், மாப்பிள்ளையின் படம் மற்றும் விவரங்களை அனுப்பி வைத்துள்ளார். இதையடுத்து, இளம்பெண் அந்த நபர் கூறிய வங்கி கணக்கிற்கு ரூ.1.37 லட்சத்தை பல்வேறு தவணைகளில் செலுத்தியுள்ளார்.

ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் மாப்பிள்ளை குறித்து எந்த தகவலும் அந்த பெண்ணுக்கு கிடைக்காத நிலையில் இளம்பெண், அந்த நபரை தொடர்பு கொண்டுள்ளார்.

ஆனால் அவருடைய செல்போன் ‘சுவிட்ச்-ஆப்’ செய்யப்பட்டிருப்பதாக தகவல் வந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அந்த இளம்பெண் உணர்ந்தார்.

பின்னர் இது குறித்து சைபர் கிரைம் பொலிசில் புகார் செய்தார்.

அதன்பேரில் பொலிசார் விசாரணை நடத்திய நிலையில் டெல்லியில் இருந்து இளம்பெண்ணை தொடர்பு கொண்டு இந்த மோசடி செய்தது தெரியவந்தது.

இது தொடர்பாக டெல்லிக்கு பொலிசார் சென்ற போது நைஜீரியாவை சேர்ந்த டவுக்ளாஸ் இபே (42) என்பவர் டெல்லி மாலவியா நகரில் வாடகைக்கு வீடு எடுத்து, திருமண இணையதளம் ஒன்றை தொடங்கி உள்ளார்.

பின்னர் அந்த இணையதளம் மூலம் இளம்பெண் மற்றும், ஆண்களை ஏமாற்றி பணம் மோசடி செய்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவரை கைது செய்த பொலிசார் அவருக்கு உதவியாக இருந்த பல்ராம் என்பவரையும் கைது செய்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers