கடன் வாங்கிக் கொடுத்த மனைவி... வேறொரு இளம் பெண்ணுடன் ஓட்டம் பிடித்த கணவன்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் புதிய தொழில் துவங்குவதாக கூறி, மனைவியிடம் பணம் வாங்கிய கணவன் வேறொரு பெண்ணுடன் ஓட்டம் பிடித்த சம்பவம் குடும்பத்தினருக்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூரைச் சேர்ந்தவர் செந்தில் குமார். இவருக்கு அன்ன பூரணி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் அன்னபூரணி கணவன் புதிய தொழில் துவங்குவதாக கூறியதால், அவருக்கு தனியார் நிதி நிறுவனத்தில் 2 லட்சம் ரூபாய் கடன் வாங்கிக் கொடுத்துள்ளார்.

ஆனால் பணத்தை வாங்கிய கணவன் புதிய தொழில் எதுவும் துவங்காமல், அதே ஊரைச் சேர்ந்த மீனா குமாரி என்ற இளம் பெண்ணுடன் ஓட்டம் பிடித்துள்ளார்.

இதை அறிந்து அதிர்ச்சியடைந்த அவரது மனைவி இது குறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதில் அவரிமிருந்து தன்னுடைய கணவரை மீட்டு ஒப்படைக்கும் படி காவல்நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்