ஆடம்பர பிறந்தநாள் கொண்டாட்டங்கள் அல்ல... இப்படி செய்வதே மகிழ்ச்சி: நெகிழும் கட்டார் தமிழர்

Report Print Arbin Arbin in இந்தியா

கட்டாரில் பணியாற்றும் தமிழகத்தின் மதுரை மாவட்டத்தை சேர்ந்த நபர் தமது மகனின் பிறந்தநாளை ஏழை மாணவர்களுக்கு உதவும் நாளாக கொண்டாடியது பலரது பாராட்டையும் பெற்றுத் தந்துள்ளது.

தமிழகத்தின் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் வேல்முருகன். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கட்டார் நாட்டில் இவர் பணியாற்றி வருகிறார்.

ஆண்டுக்கு ஒருமுறை இந்தியா செல்லும் வேல்முருகன், அரசுப் பாடசாலை மற்றும் ஏழைக் குழந்தைகளுக்கு உதவிகள் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்த ஆண்டு தமிழகத்தில் ஏதாவது ஒரு கிராமத்தில் இருக்கும் அரசுப் பாடசாலை மாணவர்களுக்கு உதவி செய்ய முடிவு செய்து,

விசாரணையில் இறங்கியதில், திண்டுக்கல் மாவட்டம் மேல கோவில்பட்டி கிராமத்தைத் தெரிவு செய்துள்ளார்.

இந்தப் பாடசாலைக்கு உதவி செய்ய முடிவு செய்த வேல்முருகன், பாடசாலை நிர்வாகத்தை தொடர்புகொண்டு பேசியிருக்கிறார். தொடர்ந்து மாணவர்களுக்குத் தேவையான, கல்வி உபகரணங்களை வாங்கித் தருவதாக உறுதியளித்துள்ளார்.

இதனையடுத்து கட்டாரிலிருந்து சென்னை சென்றவர், தன் மனைவி திரிபுர சுந்தரி, மகன் விக்னேஷ் ஆகியோரை அழைத்துக்கொண்டு வத்தலகுண்டு சென்றுள்ளார்.

ஸ்கூல் பேக், நோட்டுகள், புத்தகங்கள், எழுதுபொருள்கள் உள்ளிட்ட பல்வேறு பொருள்களை பள்ளித் தலைமையாசிரியர் பாண்டியம்மாள், ஊர் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் மாணவர்களுக்கு வழங்கியுள்ளார்.

இந்த விழாவில் பேசிய வேல்முருகன், பிறந்தநாளை ஆடம்பரமாக கொண்டாடுவது எனக்குப் பிடிக்கவில்லை.

என் மகனின் பிறந்தநாளை ஏழை மாணவர்களுக்கு உதவும் நாளாக மாற்ற முடிவு செய்தேன். கடந்த 15 ஆண்டுகளாக இதைச் செய்து வருகிறேன்.

ஏழை மாணவர்களுக்கு உதவும்பொழுது, என் மகனின் பிறந்த நாளுக்காக இதைச் செய்கிறேன். என இதுவரை குறிப்பிட்டதில்லை.

இந்த முறைதான் முதல்முறையாக சொல்கிறேன். ஏழை மாணவர்களுக்கு உதவி செய்வதைவிட, பிறந்தநாள் கொண்டாட்டம் பெரியதில்லை என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers