வெளிநாட்டில் சொகுசாக வாழ ஆசை! சென்னை பெண்ணுக்கு பணம் கொட்டியது எப்படி? அதிரவைக்கும் பின்னணி

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் லட்சக்கணக்கில் பணத்தை மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பிச்செல்ல முயன்ற பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர்.

சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்தவர் இந்திராணி (38). இவருக்கு கடந்த ஆண்டு பேஸ்புக் மூலமாக மாதேஷ் என்பவர் பழக்கமானார்.

அப்போது மாதேஷ், இந்திராணியிடம் வாவ் காயின் வர்த்தகம் குறித்து கூறினார்.

மேலும் பத்மஜ் பொம்மி செட்டி சீனிவாசலு (48), அவரது மகள் ஆர்த்தி அன்னாவரம் மற்றும் அவர்களது நண்பர் கிளைண்ட் ஜோசப் ஆகிய 3 பேரை தொடர்பு கொண்டால் ஓன்லைனில் வாவ் காயினில் முதலீடு செய்ய உதவுவார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

அப்போது அந்த 3 பேரும் இந்திராணியிடம், குறிப்பிட்ட தொகை ஒன்றை நீங்கள் முதலீடு செய்தால் 10 ஆண்டுகளில் முதலீட்டுத் தொகை பெருகி பல மடங்கு பணம் சம்பாதிக்கலாம் என்று ஆசைவார்த்தை கூறினர்.

இதை நம்பிய இந்திராணி ரூ.17 லட்சத்தை பத்மஜ் பொம்மி செட்டி சீனிவாசலு நடத்தி வந்த நிறுவன வங்கிக் கணக்கிற்கு அனுப்பினார்.

ஆனால் 6 மாதத்திற்கு பின்னரும் முதலீடு செய்த பணம் திரும்ப கிடைக்கும் என கூறிய நிலையில், பல மாதங்கள் கடந்த பின்னரும் அந்தப் பணம் கிடைக்கவில்லை என தெரிகிறது.

இதன் பின்னர் இந்திராணி விசாரித்தபோதுதான் தன்னிடம் பெற்ற பணத்தை எந்த நிறுவனத்திலும் முதலீடு செய்யாமல் அவர்கள் தன்னை ஏமாற்றியது தெரியவந்தது.

இதையறிந்து அதிர்ச்சி அடைந்த இந்திராணி அவர்களிடம் பணத்தை திரும்ப கேட்டபோது, கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து இந்திராணி பொலிசில் புகார் அளித்த நிலையில் பொலிசார் தலைமறைவான 3 பேரையும் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சென்னை விமான நிலையத்தில் இருந்து மலேசியா தப்பிச்செல்ல முயன்ற பத்மஜ் பொம்மி செட்டி சீனிவாசலுவை விமானப்படை அதிகாரிகள் அடையாளம் கண்டு கொண்டனர்.

அவர் மலேசியாவுக்கு சென்று சொகுசு வாழ்க்கை வாழ திட்டமிட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்ட நிலையில் மற்ற இருவரை பொலிசார் தேடி வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...