தாயை பார்த்து ஆற்றில் குதித்த 3 குழந்தைகள்.. பின்னர் நேர்ந்த சோகம்! நெஞ்சை உருக்கும் சம்பவம்

Report Print Kabilan in இந்தியா

இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள ஷிடால்பட்டி எனும் இடத்தில், தனது குழந்தையை காப்பாற்ற ஆற்றில் குதித்த தாயுடன் மேலும் 3 குழந்தைகளும் சேர்ந்து குதித்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வட மாநிலங்களான பீகார், உத்தரப் பிரதேசம், அசாம் ஆகியவற்றில் தென்மேற்கு பருவ மழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

குறிப்பாக அசாமின் லட்சுமிபூர், சோனித்பூர், ஜோர்ஹாட் உள்ளிட்ட 30 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதுவரை 67 பேர் அங்கு வெள்ளத்தால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பீகார் மாநிலத்தில் ஒரு துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஷிடால்பட்டி என்ற இடத்தில் ராணி தேவி என்ற பெண், தனது 4 குழந்தைகளுடன் அருகில் உள்ள ஆற்றுக்கு குளிக்கச் சென்றுள்ளார். அப்போது வெள்ளத்தினால் ஆற்றில் நீரோட்டம் அதிகரித்ததால், ஒரு குழந்தை தவறி விழுந்துள்ளது.

இதனால் பதறிப்போன ராணி தேவி, உடனே ஆற்றுக்குள் குதித்துள்ளார். தாய் ஆற்றுக்குள் குதிப்பதை பார்த்த மற்ற மூன்று குழந்தைகளும் ஆற்றில் குதித்துள்ளனர். இதனைக் கண்டவர்கள் விரைந்து சென்று அவர்களை காப்பாற்ற முயற்சித்துள்ளனர். ஆனால் ராணி தேவியுடன், ஒரு குழந்தையை மட்டுமே அவர்களால் காப்பாற்ற முடிந்துள்ளது.

மற்ற 3 குழந்தைகளும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர். இந்நிலையில், அடித்துச் செல்லப்பட்ட குழந்தைகளில் அர்ஜூனின் உடல் மீட்கப்பட்டுள்ளது. இந்த குழந்தையின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்