மூட்டையில் கட்டி கிணற்றில் தூக்கி வீசப்பட்டிருந்த பெண்ணின் சடலம்

Report Print Vijay Amburore in இந்தியா

சென்னையில் அதிக வட்டி வசூலித்த பெண்ணை அடித்து கொலை செய்து கிணற்றில் தூக்கி வீசியுள்ள சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த அல்போன்ஸ் மேரி, சென்னையில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறார்.

காலையில் வட்டி வசூலிக்கும் வேலையும், மாலையில் இட்லி கடையும் வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த 15ம் திகதியன்று அல்போன்ஸ் மேரி திடீரென மாயமாகியுள்ளார்.

இதுகுறித்து அவருடைய கணவர் இருதயநாதன் பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போது, மதுராந்தகம் அருகே உள்ள கிணற்றில் சடலமாக நேற்று கண்டெடுக்கப்பட்டார்.

கொலைக்கான காரணம் மற்றும் கொலையாளிகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தேவி - மணி என்கிற தம்பதியினர் அடித்து கொலை செய்திருப்பது தெரியவந்தது.

இந்த கொலைக்கு வள்ளி அவரது கணவர் சுரேஷ் ஆகியோரும் உதவி செய்திருப்பது தெரியவந்தது.

இந்த நிலையில் நான்கு பேரையும் கைது செய்து பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers