அரசு ஊழியர்களின் வாட்ஸ்-அப் குழுவிற்கு வந்த ஆபாச படங்கள்.. அதிர்ச்சியடைந்த பெண் ஊழியர்கள்!

Report Print Kabilan in இந்தியா

இந்தியாவின் கேரள மாநிலத்தில் அரசு ஊழியர்களின் வாட்ஸ்-அப் குழுவில், ஆபாச படங்கள் பதிவிடப்பட்டதால் பெண் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

கேரளாவில் திருவனந்தபுரம் தலைமை செயலகத்தில் உள்ள அரசு ஊழியர்கள், தங்களுக்கென வாட்ஸ்-அப் குழுவை தொடங்கியுள்ளனர். அதில் தங்களது பணி குறித்த தகவல்களை அவர்கள் பரிமாறி வந்தனர்.

அத்துடன் அரசு ஊழியர்களின் சங்க செயல்பாடுகள், கூட்டங்கள், அதில் எடுக்கப்படும் தீர்மானங்கள் குறித்தும் பேசி வந்துள்ளனர். சங்கத் தலைவரும், நிர்வாகிகளும் வாட்ஸ்-அப் குழுவின் அட்மின் ஆக இருக்கின்றனர்.

இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு சங்க செயல்பாடுகள் குறித்து வாட்ஸ்-அப் குழுவில் விவாதம் நடந்துகொண்டிருந்தபோது, ஏராளமான ஆபாச படங்கள் அடுத்தடுத்து பதிவிடப்பட்டன. இதனால் குழுவில் இருந்த பெண் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

உடனே இதுதொடர்பாக சங்க நிர்வாகிகளிடம் புகார் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, சங்க நிர்வாகி ஒருவர் உடனே இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார். பின்னர் வாட்ஸ்-அப் குழுவில் இதுபற்றி அவர் தகவல் பதிவிட்டார்.

அப்போது சங்க உறுப்பினர் ஒருவரின் செல்போன் தொலைந்து விட்டதாகவும், அந்த செல்போனை எடுத்தவர் ஆபாச படங்களை பதிவேற்றியதாகவும் கூறினார். ஆனால், அவர் படங்களை பதிவேற்றியவரை பாதுகாக்கவே இவ்வாறு தவறான தகவலை பதிவிட்டது தெரிய வந்தது.

அதனைத் தொடர்ந்து, உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு இந்த விடயம் சென்ற பின்னர், அவர்கள் வாட்ஸ்-அப் குழுவின் அட்மின் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்