சரவணபவன் ராஜகோபாலின் 2-வது மனைவி யார் தெரியுமா? இணையத்தில் வைரலாகி வரும் புகைப்படம்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் பெண் சபலத்தால் சரிந்த சரவணபவன் ராஜகோபால் இரண்டாவது மனைவியின் புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

உலகெங்கும் புகழ் பெற்ற சரவணபவன் கிளைகளைக் கொண்ட ராஜாகோபால் வாழ்க்கையில் பெரிய பிரச்சனையாக இருந்தது அவரின் இரண்டாவது மனைவி கிருத்திகாவுடன் ஏற்பட்ட மனக்கசப்பு தான், இதுவே அவருக்கும் பெரும் தலைவலியாக இருந்தது எனவும், சிறிது சிறிதாக ஆரம்பித்த சண்டை அதன் பின் பெரிய அளவில் வெடித்தது எனவும் அப்போது செய்திகள் வெளியாகின.

அதுமட்டுமின்றி இரத்த சொந்தங்கள் சிலராலே அவரின் நிம்மதி பறிபோனதாக, ராஜகோபாலுக்கு நெருங்கிய நண்பர்கள் கூறியிருந்தனர்.

இந்நிலையில் தான் ராஜகோபாலின் இரண்டாவது மனைவியின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ராஜகோபால் அனைத்து ஹோட்டல்களுக்கு நேரடியாக சென்று உணவின் தரம் மற்றும் சுவையை பரிசோதிப்பது வழக்கம்.

அது போன்று தான் கடந்த 1990-களில் சென்னையில் உள்ள தனது சரவணபவன் ஹோட்டலுக்கு உணவை தரம் பார்க்க சென்ற போது அங்கு வந்திருந்த ஒரு பெண்மணியை பார்த்து அவர் அழகில் மயங்கினார்.

இதனால் அந்த பெண் யார் என்பது குறித்து விசாரித்த போது, அவர் வேறு யாரும் இல்லை

ஹோட்டலில் முருக்குப் போடும் ஊழியரின் மனைவி தான் என்று அவருக்கு தெரியவர, உடனே அவரை நேரடியாக அழைத்து, .உன்னுடைய மனைவி கிருத்திகா மீது எனக்கு ஆசை இருக்கிறது நான் அவளைத் திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

ஆனால் முதலில் அதிர்ச்சியடைந்த கணவர் மற்றும் கிரித்திகா, அதன் பின் கிருத்திகா கணவரை விட்டுவிட்டு அவருடன் வந்துவிட்டார்.

கிருத்திகாவை இரண்டாவதாக திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். அதன் பின் இவர்களின் வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருந்த போது, தான் ஜீவஜோதி ராஜகோபால் கண்ணில் பட, அதன் பின் அவர் வாழ்க்கையே நரகமாக மாறியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்