படுக்கை அறையில் கண்காணிப்பு கமெரா... மனைவியின் புகாருக்கு கணவன் அளித்த அதிர்ச்சி பதில்

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவின் திரிபுரா மாநிலத்தில் பெண் ஒருவர் தங்களது படுக்கை அறையில் கணவர் கண்காணிப்பு கமெரா பொருத்தியுள்ளதாக மகளிர் ஆணையத்தை அணுகி புகார் அளித்துள்ளார்.

குறித்த புகார் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட மகளிர் ஆணையம், அந்த கணவர் அளித்த பதில் கேட்டு அதிர்ச்சியில் உறைந்துள்ளது.

படுக்கை அறையில் கண்காணிப்பு கமெரா பொருத்தியுள்ளது, பாதுகாப்பு கருதியே என அவர் மகளிர் ஆணையத்திடம் பதிலளித்துள்ளார்.

பெண் அளித்த புகாரில், படுக்கை அறையில் தாங்கள் இருவரும் இரண்டு படுக்கையில் படுப்பதாகவும், ஆனால் தாம் படிக்கும் இடத்தை குறிவைத்தே அந்த கமெரா பொருத்தப்பட்டுள்ளது என அந்த பெண் சுட்டிக்காட்டியுள்ளார்.

சாதுடில்லா என்ற கிராமத்தில் குடியிருக்கும் ரத்னா பொட்டார் என்ற யுவதியே தமது படுக்கை அறையில் கண்காணிப்பு கமெரா பொருத்தப்பட்டுள்ள விவகாரத்தை மகளிர் ஆணையத்திடம் புகார் அளித்தவர்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இவர் சந்தன் காந்தி தர் என்பவரை திருமணம் செய்துள்ளார். திருமணத்தின்போது சந்தன் காந்தி தமக்கு வரதட்சினை ஏதும் வேண்டாம் என கூறியிருந்தாலும், அதன் பின்னர் கணவரின் குடும்பத்தாரால் இந்த விவகாரம் தொடர்பில் கொடுமைப்படுத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, பரம்பரை சொத்தாக கைமாறிவரும் நிலத்தில் இருந்து ஒருபகுதியை விற்று, சுமார் 2 லட்சம் ரூபாய் சந்தன் காந்தி குடும்பத்தாரிடம் அளித்துள்ளனர்.

இந்த நிலையில், தமது கணவருக்கு, அவரின் தூரத்து உறவு பெண் ஒருவருடன் தகாத உறவு இருப்பதை தாம் தெரிந்துகொண்ட நிலையில், அவர் படுக்கை அறையில் கண்காணிப்பு கமெராவை பொருத்தியதாக ரத்னா மகளில் ஆணையத்திடம் தெரிவித்துள்ளார்.

மேலும், தங்களது குடியிருப்பு மொத்தமும் கண்காணிப்பு கமெரா பொருத்தப்பட்டுள்ளதாகவும், இதன் முக்கிய பகுதி சந்தன் காந்தியின் தாயாரின் படுக்கை அறையில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த புகாரில் ரத்னா சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால் இந்த புகாருக்கு மறுப்பு தெரிவித்துள்ள சந்தன் காந்தி, மனைவியின் நடத்தையில் சந்தேகம் எழுந்ததை அடுத்தே தாம் கமெரா பொருத்தியதாகவும், வரதட்சினை கேட்டு துன்புறுத்தியதாக கூறுவது பொய் எனவும் அவர் சாதித்துள்ளார்.

இருவரின் வாதங்களை பதிவு செய்துள்ள மகளிர் ஆணையம், தற்போது 45 நாட்கள் கால அவகாசம் அளித்துள்ளனர். அதனுள் இருவரும் தங்களின் பிரச்னைகளை பேசி தீர்க்க வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்