திருமணம் செய்யாமல் தனியாக வாழ்ந்த கோடீஸ்வரர்.. வீட்டு பணிப்பெண் அழகில் மயங்கியதால் நேர்ந்த விபரீதம்

Report Print Raju Raju in இந்தியா

சென்னையில் பெண் மோகத்தால் பணத்தை இழந்த கோடீஸ்வரர் நடுக்கடலில் கொலை செய்யப்பட்டு தண்ணீரில் தூக்கி வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடையாறு இந்திரா நகரைச் சேர்ந்தவர் சுரேஷ் பரத்வாஜ், (50).

கோடீஸ்வரரான இவர் திருமணம் செய்யாமல் பங்களா வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இவருக்கு சொந்தமாக வணிகவளாகம் மற்றும் 10க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளதால், அவற்றின் மூலம் மாதந்தோறும் லட்சக்கணக்கில் வாடகை வந்துள்ளது.

ஜூன் 21ல், பரத்வாஜ் திடீரென மாயமானார். இது தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தினர். அதில், பரத்வாஜ் கொலை செய்யப்பட்டு, காசிமேடு கடலில், உடல் வீசப்பட்டது தெரிய வந்தது.

இது தொடர்பாக, மூவர் கைது செய்யப்பட்டனர். வழக்கின் முக்கிய குற்றவாளியான, பெண் வழக்கறிஞர், பிரீத்தி உள்ளிட்ட இருவரை பொலிசார் தேடி வருகின்றனர்.

கொலை குறித்து பொலிசார் கூறுகையில், பரத்வாஜ், தன் வீட்டில் வேலை பார்த்த, இளம்பெண் ஒருவரின் அழகில் மயங்கி உள்ளார்.

அவரை அடைய பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டுள்ளார். அவரின் தவறான போக்கை அறிந்த அந்த பெண், வேலையில் இருந்து விலகினார்.

ஆனாலும் பரத்வாஜ், அந்த பெண் மீது மோகம் குறையாமல் இருந்தார்.

இதையறிந்த வழக்கறிஞர் பிரீத்தி (35) அந்த பெண்ணை பணிய வைப்பதாக கூறி, பரத்வாஜிடம் பல மாதங்களாக, 65 லட்சம் ரூபாய் பறித்துள்ளார்.

ஆனால், பரத்வாஜ் நினைத்தது நடக்காததால், பிரீத்தியிடம் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுள்ளார்.

சம்பவத்தன்று, பிரீத்தி காசிமேடுக்கு பரத்வாஜை அழைத்துள்ளார். அங்கு அவரை அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ், சுரேஷ், மனோகர், ஆகியோருடன் படகில், கடலுக்குள் அனுப்பி வைத்தார்.

படகில் மூவரும் சேர்ந்து பரத்வாஜை கொலை செய்து, உடலை கடலில் வீசியுள்ளனர்.

இது தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டனர். பிரீத்தி உள்ளிட்ட இருவரை தேடி வருகிறோம் என கூறியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers