சரவணபவன் ராஜகோபால் சடலத்தை பார்த்து கதறிய பெண்கள்.. யார் அவர்கள்? வெளியான புகைப்படம்

Report Print Raju Raju in இந்தியா
2216Shares

உயிரிழந்த சரவணபவன் ராஜகோபால் உடல் சென்னையில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்ட நிலையில் பெண்கள் பலர் உடலை பார்த்து கதறி அழுதனர்.

தமிழகத்தில் சைவ உணவுக்கான சாம்ராஜ்யத்தை சரவணபவன் என்ற பெயரில் உருவாக்கியவர் தொழில் அதிபர் ராஜகோபால்.

கடந்த 2001-ம் ஆண்டு நடந்த பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் இவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நேற்று முன் தினம் ராஜகோபால் சென்னை தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இதையடுத்து நேற்று இரவு ராஜகோபாலின் உடல் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வைத்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு பின்னர் ஆம்புலன்சுக்கு மாற்றப்பட்டு அவரது சொந்த ஊரான புன்னைநகருக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதைத்தொடர்ந்து இன்று அவரது உடலுக்கு இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது.

முன்னதாக நேற்று மதியம் ராஜகோபால் உடல் சரவணபவன் ஹொட்டல் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை கே.கே நகரில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டது.

அப்போது அங்கிருந்த பெண்கள் சிலர் அவர் உடலை பார்த்து கதறி அழுதார்கள்.

அவர்கள் சரவணபவனில் பணிபுரியும் ஊழியர்களகளாக இருக்கலாம் என தெரிகிறது.

தனது ஹொட்டலில் பணிபுரியும் ஊழியர்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டவராக ராஜகோபால் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்