வீட்டில் தூங்கி கொண்டிருந்த தம்பதி.. அதிகாலை 4 மணிக்கு வீட்டிலிருந்து வெளியேறிய மனைவி.. நடந்த விபரீதம்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் குழந்தையுடன் ரயில் முன்னர் பாய்ந்து இளம் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூரை சேர்ந்தவர் செல்வம் . இவரது மனைவி கோமதி, தம்பதிக்கு நாகஸ்ரீ (7), நவிஸ்ரீ (3) ஆகிய 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் கணவன்- மனைவி இடையே குடும்ப பிரச்சனை தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதில் மனமுடைந்த கோமதி தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.

இதைத் தொடர்ந்து நேற்று இரவு வீட்டில் நான்கு பேரும் தூங்கி கொண்டிருந்தனர்.

இன்று அதிகாலை 4 மணி அளவில் கோமதி தனது மகள் நவிஸ்ரீயுடன் வீட்டை விட்டு வெளியேறி ரெயில் தண்டவாளம் பகுதிக்கு சென்று சென்னையில் இருந்து மன்னார்குடி வந்த மன்னை எக்ஸ்பிரஸ் ரெயில் முன் பாய்ந்துள்ளார்.

இதில் படுகாயம் அடைந்த கோமதியும், நவிஸ்ரீயும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

இது பற்றி தகவலறிந்த பொலிசார் இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு சம்பவம் தொடர்பாக விசாரித்து வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers