முதல் கணவரை பிரிந்து இரண்டாம் கணவருடன் வசித்து வந்த கர்ப்பிணி பெண்.. நள்ளிரவில் நடந்த சம்பவம்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் கர்ப்பிணி பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் அவர் முதல் கணவர் உள்ளிட்ட இருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மதுரை மாவட்டம் அருகே உள்ள வடிவேல்கரையைச் சேர்ந்தவர் வடிவேல் (30). இவரது மனைவி அம்சத் (22). தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்த சூழலில் அம்சத் வடிவேலை பிரிந்து சில காலமாக இரண்டாவது கணவர் மதன் என்பவருடன் தனியாக வசித்து வந்த நிலையில் கர்ப்பமாக இருந்தார்.

இவர்கள் இருவரும் முறைப்படி திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

மனைவி பிரிந்து சென்ற நாளிலிருந்து அவர் மீது வடிவேல் ஆத்திரத்தில் இருந்தார். இந்நிலையில் நேற்று இரவு 11.30 மணிக்கு உறவினருடன், அவர் அம்சத் வீட்டிற்கு சென்றார்.

வீட்டில் அம்சத் மற்றும் மதன் உறங்கிக் கொண்டிருந்தனர். அவர்களை வடிவேல் சரமாரியாக அரிவாளால் வெட்டினார்.

இதில் பலத்த காயம் அடைந்த அம்சத் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். பின்னர் வடிவேல் தப்பியோடி விட்டார்.

பலத்த காயமடைந்த மதன் கத்திய சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிசார் தலைமறைவாக இருந்த வடிவேல் மற்றும் அவர் உறவினரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்