ரஜினிகாந்த்-சூர்யா போன்றவர்கள் மக்களை குழப்புகிறார்கள்! தமிழிசை குற்றச்சாட்டு

Report Print Kabilan in இந்தியா

நடிகர்கள் சூர்யா, ரஜினிகாந்த் மற்றும் திருமாவளவன் போன்றவர்கள் புதிய கல்விக் கொள்கை மீதான தங்களின் எதிர்ப்பு மூலம் மக்களை குழப்புவதாக தமிழிசை சௌந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.

சமீபத்தில் புதிய கல்விக் கொள்கை குறித்து விமர்சித்த சூர்யாவின் பேச்சு விவாதப் பொருளாக மாறியுள்ளது. திரைத்துறையில் பலரும் அவருக்கு ஆதரவாக பேசி வரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்தும் அவரது கருத்தை ஆதரிப்பதாக தெரிவித்தார்.

இந்நிலையில், திருவள்ளூரில் உள்ள அய்யா வைகுண்டர் ஆலயத்தில் நடைபெற்ற விழாவில் தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டார். அப்போது அவர் ரஜினிகாந்த் - சூர்யா போன்றோர் மக்களை குழப்புவதாக குற்றம்சாட்டினார்.

மேலும் அவர் கூறுகையில், ‘சூர்யா, ரஜினி, திருமாவளவன் இவர்களெல்லாம் பேசும்போது புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதாக பேசுகிறார்கள். நான் கூறுகிறேன் இன்னும் ஒரு மாதம் கால அவகாசம் உள்ளது.

உங்களுடைய கருத்துக்களை பதிய வைக்கலாம். ஜனநாயக முறைப்படி அதற்கான அவகாசத்தை மத்திய அரசு கொடுத்திருக்கிறது. இப்போது கொடுத்திருப்பது வரைவு தான். அதில் உங்களுக்கு எந்த விடயம் பிடிக்கவில்லை என்பதை பதிவு செய்யலாம்.

இங்கே பணக்காரர்களுக்கு ஒரு கல்வி, ஏழைகளுக்கு ஒரு கல்வி தானே இருக்கிறது. இப்போது தான் சமமான நிலை இல்லை. புதிய கல்விக் கொள்கை வந்தால் சமமான நிலை வரும்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்