ஏழை முதியவருக்கு கோடி கணக்கில் வந்த மின் கட்டணம்: அதிகாரிகள் அலட்சிய பதில்

Report Print Basu in இந்தியா

உத்தர பிரதேச மாநிலத்தில் வயதான முதியவருக்கு 128 கோடி மின் கட்டணம் வந்துள்ள சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஹப்பூரில் உள்ள சாம்ரி கிராமத்தில் தனது மனைவியுடன் வசித்து வரும் ஷமிம் என்ற முதியவருக்கே அம்மாநில் மின்வாரியத்துறை 128 கோடி மின் கட்டணம் செலுத்தும் படி பில் அனுப்பியுள்ளது.

சம்பவம் குறித்து கூறிய ஷமிம், எங்கள் வீட்டில் 2 கிலோவாட் அளவில் மட்டுமே மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது. தவறான பில்லை சரிபார்த்து தரும் படி மின்வாரியத்தை அனுகினோம், ஆனால், பில்லை செலுத்து இல்லையென்றால் மின்சார மீண்டும் இணைக்கப்படாது என அதிகாரிகள் எச்சரித்தனர்.

எங்கள் குறையை கேட்க யாருமே முன்வர வில்லை. இத்தொகையை எங்களால் எப்படி செலுத்த முடியும். எங்களுக்கு மாதம் 700 ரூபாய் முதல் 800 ரூபாய் வரை தான் மின் கட்டண பில் வரும். ஆனால், இம்முறை இந்த நகரம் முழுவதற்கான மின் கட்டண பில்லை, என்னை செலுத்து சொல்கிறது மின்வாரியம் என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய உதவி மின் பொறியாளர் ராம் சரண், இது தொழில்நுட்ப பிழையாக இருக்க வேண்டும். அவர்கள் எங்களுக்கு பில்லை வழங்கினால், கணினியில் உள்ள தொழில்நுட்ப பிழைகளை சரிசெய்த பிறகு புதுப்பிக்கப்பட்ட ஒன்றை தருவோம். இது ஒன்றும் பெரிய விஷயமல்ல. தொழில்நுட்ப தவறுகள் நடப்பது தான் என விளக்கமளித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்