பொலிஸாருக்கு தகவல் கொடுத்துவிட்டு காதலியின் கழுத்தை அறுத்த காதலன்

Report Print Vijay Amburore in இந்தியா

ராஜஸ்தான் மாநிலத்தில் காதலியை கொலை செய்துவிட்டு காதலனும் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்ப்பூரை சேர்ந்த முகேஷ் (25) என்கிற இளைஞர் சுமன் (20) என்பவரை காதலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று மதியம் 3 மணியளவில் பொலிஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த முகேஷ், நான் என்னுடைய காதலியை கொலை செய்ய போகிறேன் எனக்கூறிவிட்டு துண்டித்துள்ளார்.

பின்னர் தன்னுடைய வீட்டு தோட்டத்தில் வைத்து காதலியின் கழுத்தை அறுத்துள்ளார். அதன்பிறகு வெளியில் இருந்த மரத்தில் தானும் தூக்குபோட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதற்கிடையில் விரைந்து வந்த பொலிஸார், சடலமாக கிடந்த இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers