லண்டனில் இருக்கும் நளினியின் மகளை பார்த்திருக்கிறீர்களா? வைரலாகும் புகைப்படம்

Report Print Santhan in இந்தியா
2701Shares

தமிழகத்தில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினி தன் மகளின் திருமணத்திற்காக பரலோலில் வெளிவரும் நிலையில் அவரின் மகளின் புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த 1991-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொல்லப்பட்டார்.

இதனால் இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஏழு பேரில் நளினியும், முருகனும் கைது செய்யப்பட்டனர்.

அதன் பின் இவர்களுக்கு கடந்த 1999-ல் மரண தண்டனை விதிக்கப்பட்டது. அதன் பின் இவர்களுக்கு கருணை அடிப்படையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இதனால் தற்போது 23 ஆண்டுகள் சிறையில் இருந்த நளினி, லண்டனில் இருக்கும் தன் மகளின் திருமணத்திற்காக 6 மாத காலம் பரோல் கேட்டிருந்தார்.

நீதிமன்றம் அவருக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் ஒரு மாதம் பரோல் கொடுத்தது.

இந்நிலையில் இன்று வெளிவந்த நளினி தன் மகளுக்கு ஒரு ஈழத்தமிழரையே மாப்பிள்ளையாக பார்ப்பதாக அவரது வழக்கறிஞர் கூறியிருந்தார்.

இதையடுத்து தற்போது லண்டனில் இருக்கும் நளினியின் மகள் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

முருகன்-நளினி இருவரும் சிறையில் இருந்த போது தான் இவர்களுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

இரண்டு ஆண்டுகள் சிறையில் இருந்த படியே வளர்ந்த குழந்தைக்கு ஹரிதா ஸ்ரீஹரன் என்று பெயர் வைத்தனர். அதன் பின் 2005-ஆம் ஆண்டு பிரித்தானியாவிற்கு சென்ற அவர் இடையில் தன் அப்பா மற்றும் அம்மாவை ஒரு முறை வந்து சந்தித்ததாக கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்