தாய்க்காக திருமணத்தையே நிறுத்திவிட்டு மகள் செய்த காரியம்: குவியும் பாராட்டு

Report Print Vijay Amburore in இந்தியா
362Shares

பெங்களூரில் வசித்து வரும் இளம்பெண் ஒருவர் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்ட தன்னுடைய தாய்க்காக திருமணத்தையே தடுத்து நிறுத்தியுள்ளார்.

வங்காளதேசத்தை பூர்விகமாக கொண்ட 25 வயது இளம்பெண் ஒருவர் பெங்களூரில் தங்கி வேலை செய்து வருகிறார். இவருக்கு சமீபத்தில் பெங்களூரை சேர்ந்த இளைஞருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இதற்கிடையில் திடீரென இளம்பெண்ணின் தாயாருக்கு இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. உடனடியாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

பல இடங்களில் தேடி பார்த்தும் சிறுநீரகம் கிடைக்காததால், அந்த இளம்பெண் தன்னுடைய சிறுநீரகத்தை கொடுக்க கொடுக்க முன் வந்துள்ளார்.

இதற்காக திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளைஞரின் அனுமதி கேட்டுள்ளார். ஆனால் அவர் இறுதிவரை அனுமதி கொடுக்காததால், ஆத்திரமடைந்த அந்த இளம்பெண் திருமணத்தை தடுத்து நிறுத்தியுள்ளார்.

பின்னர் 21ம் திகதி மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையில் தன்னுடைய ஒரு சிறுநீரகத்தை தாய்க்கு கொடுத்துள்ளார்.

இந்த சம்பவத்தை அறிந்த மக்கள் அனைவரும் தாய்க்காக தன்னுடைய திருமணத்தையே தடுத்து நிறுத்திய இளம்பெண்ணை பாராட்டி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்