HIV ரத்தம் ஏற்றப்பட்ட பெண்ணிற்கு வீடு, லட்சக்கணக்கில் பணம்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் எச்.ஐ.வி இரத்தம் ஏற்றப்பட்ட பெண்ணிற்கு 25 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 2 படுக்கையறைகள் கொண்ட வீடு வழங்கும் படி நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

விருதுநகர் பெண்ணிற்கு அரசு மருத்துவமனையில் எச்.ஐ.வி ஏற்றப்பட்ட விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இதனால் இந்த விவகாரம் குறித்து மதுரையை சேர்ந்த அப்பாசாமி மற்றும் முத்துக்குமார் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொது வழக்காக மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு, எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்டு பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 25 லட்ச ரூபாயை தமிழக அரசு இழப்பீடாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

அதில், 10 லட்ச ரூபாயை பெண்ணின் பெயரில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் டெபாசிட் செய்ய வேண்டும் என்றும், மீதமுள்ள 15 லட்ச ரூபாயை மைனரான இரு குழந்தைகள் பெயரிலும் டெபாசிட் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதுமட்டுமின்றி பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 450 சதுர அடிக்கு குறையாமல் இரு படுக்கையறைகளைக் கொண்ட சுற்றுச்சுவருடன் கூடிய வீடு கட்டித்தர வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், உத்தரவை, நிறைவேற்றியது குறித்த அறிக்கையை ஜனவரி 11 ஆம் திகதி தாக்கல் செய்யவும் தமிழக அரசு​க்கு நீதிபதிகள், உத்தரவிட்டனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers