ஏழு தமிழர்கள் விடுதலை விவகாரம் தொடர்பாக பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் மற்றும் திருமாவளவன் ஆகியோர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து மனு அளித்துள்ளனர்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் பேராறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்டோர் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மகள் திருமண ஏற்பாட்டுக்காக நளினி ஒரு மாதம் பரோலில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்த ஏழு பேரையும் சிறையிலிருந்து விடுவிக்க கோரி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து தமிழக ஆளுநர் இவர்கள் விடுதலை விவகாரத்தில் முடிவெடுக்க நீதிமன்றம் அதிகாரம் வழங்கியது. ஆனால் ஆறு மாதங்கள் கடந்தும் ஆளுநர் இவ்விவகாரத்தில் மெளனம் காத்து வருகிறார்.
இந்நிலையில் 7 பேர் விடுதலை விவகாரம் தொடர்பாக பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் உடன் சென்று, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இன்று காலை இந்திய நேரப்படி 11.45 மணிக்கு தொல்.திருமாவளவன் சந்தித்துள்ளார்.
சந்திப்பின் போது ஏழு பேரையும் விடுவிக்க கோரி மனு அளிக்கப்பட்ட நிலையில் இது தொடர்பாக அற்புதம்மாள் அமித்ஷாவிடம் பேசினார்.
இது சம்மந்தமான வீடியோ வெளியாகியுள்ளது.
பேரறிவாளன் உள்ளிட்ட
— FX16 News (@fx16news) July 29, 2019
ஏழு தமிழர்களை
விடுதலை செய்ய வலியுறுத்தி
விசிக தலைவர் திருமாவளவன் எம்பி உள்துறை அமைச்சர்
அமித்ஷாவை சந்தித்து மனு அளித்தார். உடன் ரவிக்குமார் எம்பி மற்றும் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள். @thirumaofficial pic.twitter.com/40ZfMn8DXX