இப்படி ஒரு விபத்தை நேரில் பார்த்ததில்லை.... நொடியில் கண்முன் அழிந்த குடும்பம்

Report Print Vijay Amburore in இந்தியா

பெங்களூரில் வார விடுமுறையை கழிப்பதற்காக சொந்த ஊருக்கு சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர், பேருந்து மீது மோதி விபத்தில் சிக்கியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

பெங்களூரை சேர்ந்த ரவி (31) - மஞ்சுளா (28) தம்பதியினர் தங்களுடைய குழந்தைகள் சுகன்யா (10), சாகர் (5) ஆகியோருடன் வார விடுமுறையை கழிப்பதற்காக சொந்த ஊருக்கு காரில் புறப்பட்டுள்ளனர்.

பெங்களூரு - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த போது Gejjalagere என்கிற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே வந்த பேருந்தின் மீது வேகமாக மோதியுள்ளது.

இதில் சம்பவ இடத்திலேயே இரண்டு குழந்தைகள் உட்பட தம்பதியினரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், உடல்களை வெளியில் எடுக்க நீண்ட நேரம் போராடினர். இதற்கிடையில் பேருந்தில் பயணித்த மாணவிகளில் பலரும் மயக்கமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து நேரில் பார்த்த மோனிகா என்கிற மாணவி கூறுகையில், என் வாழ்நாளில் இப்படி ஒரு விபத்தை நேரில் பார்த்தது இல்லை. ஒரு சில வினாடிகளில் எங்கள் கண்முன் ஒரு குடும்பமே சிதைந்துவிட்டது என வேதனை தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்