பூட்டிய வீட்டிலிருந்து வந்த துர்நாற்றம்... 3 குழந்தைகளுடன் தூக்கில் தொங்கிய தாய்

Report Print Vijay Amburore in இந்தியா

மகாராஷ்டிரா மாநிலத்தில் 3 குழந்தைகளை கொன்றுவிட்டு தாயும் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த அக்ரம் பகவான் என்பவர் பழக்கடை ஒன்று நடத்தி வருகிறார். இவருக்கு பாத்திமா (28) என்கிற மனைவியும், அலியா பக்பன் (9), சோபா (7), ஜியான் (6) என்கிற மூன்று குழந்தைகளும் உள்ளார்.

கடந்த சில நாட்களாகவே பழக்கடையில் வியாபாரம் நடைபெறாமல் நஷ்டம் ஏற்பட்டு வந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக கணவன்-மனைவிக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் பக்கத்து வீட்டை சேர்ந்த ஒருவர், பாத்திமா வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் கதவை திறந்துகொண்டு உள்ளே சென்று பார்த்த போது, மூன்று குழந்தைகளும் நைலான் கயிற்றில் தூக்கில் தொங்கியுள்ளனர். அவர்களுடைய தாய் பக்கத்து அறையில் சேலையில் தூக்கில் தொங்கியுள்ளார்.

இந்த நிலையில் மூன்று பேரின் உடல்களையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ள பொலிஸார், சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்