தன்னை கடித்த விஷப்பாம்பை கடித்து துண்டுகளாக்கிய இளைஞர்

Report Print Vijay Amburore in இந்தியா

உத்திரபிரதேச மாநிலத்தில் தன்னை கடித்த விஷப்பாம்பை கடித்து துண்டுகளாக்கிய இளைஞர் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

உத்திரபிரதேச மாநிலம் அஸ்ரோலி கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்கிற இளைஞர் தன்னுடைய வீட்டில் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்துள்ளார்.

அந்த சமயத்தில் வீட்டிற்குள் புகுந்த விஷப்பாம்பு ஒன்று அவரை கடித்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அவர் மதுபோதையில் அந்த விஷ பாம்பை துண்டுதுண்டாக கடித்து வீசியுள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவருடைய தந்தை பாபு, உடனடியாக ராஜ்குமாரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.

அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர் ராஜ்குமார் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறியதோடு, வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

இதனையடுத்து தற்போது வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ராஜ்குமார் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்