நள்ளிரவில் வந்த மிஸ்டுகால்.... சந்தேகப்பட்ட மனைவிக்கு தெரிந்த கணவனின் லீலைகள்: அதன் பின் கொடுத்த வாக்குறுதி

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் மனைவிக்கு தெரியாமல் 3 பெண்களை திருமணம் செய்த சம்பவத்தில், அந்த நபர் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் அருகே இருக்கும் அழகன்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோட்டை ராஜூ. இவரது மகளான கோமளா தேவிக்கும், மடக்கொட்டான் பகுதியைச் சேர்ந்த ராமுவின் மகன் கங்காதரனுக்கும் இடையே கடந்த 2008-ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது.

திருமணத்திற்கு பின் மனைவியின் நகைகளை மூலதனமாக வைத்து, துபாய்க்கு சென்ற அவர், அங்கு வெளிநாட்டு கம்பெனிக்கு வேலையாட்களை அனுப்பும் நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார்.

அப்போது இவருடன் மனைவி கோமவள்ளியும் இருந்துள்ளார். அதன் பின் கணவரின் நடவடிக்கையில் சந்தேகமடைய, சுதாரித்துக் கொண்ட கங்காதரன் அவரை மீண்டும் இந்தியாவிற்கு கொண்டு வந்து விட்டு விட்டு, துபாய்க்கு அவ்வபோது சென்று வந்துள்ளார்.

அப்படி இந்தியாவிற்கு வந்த போது, நள்ளிரவில் இவருக்கு நள்ளிரவில் ஒரு மிஸ்டு கால், வர இதைக் கண்ட கோமளதேவி அந்த நம்பரை குறித்து வைத்து, அதன் பின் அந்த நம்பரை தொடர்பு கொண்ட போது, நான் கங்காதரனின் மனைவி பேசுகிறேன், கர்ப்பமாக இருக்கிறேன் என்று கூற, அதிர்ச்சியடைந்த கோமளாதேவிக்கு மேலும் அதிர்ச்சியாக இது போன்று கங்காதரன் கவிதா, யமுனா, சென்னையைச் சேர்ந்த தீபா என 4 திருமணம் செய்துள்ளார் என்பதை கண்டுபிடித்துள்ளார்.

இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணைக்கு பின் முழு தகவல் தெரியவரும் என்று கூறப்பட்ட நிலையில், இது தொடர்பான விசாரணையில் கங்காதரன் தான் பெண்களை திருமணம் செய்து கொண்டது உண்மை தான் என்று ஒப்புக் கொண்டுள்ளார்.

இதனால், அவர் குழந்தைகள் பெயரில் 10 லட்சம் ரூபாய் டெப்பாசிட் செய்வதாகவும், மனைவிக்கு மாதம் 15 ஆயிரம் ரூபாய் அளிப்பதாகவும், 5 செண்ட் நிலம் எழுதித் தருவதாகவும் வாக்கு கொடுத்துள்ளார்.

இதையடுத்து இது பெரிதாக எடுத்துச் செல்லாமல் கட்டப்பஞ்சயாத்திலே முடிந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்