பூமிக்குள் புதைந்தவரை... உயிரோடு காப்பாற்றிய நாய்: நெகிழ்ச்சி சம்பவத்தின் வீடியோ

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் நிலச்சரிவினால் பூமிக்குள் புதைந்த நபரை காப்பாற்றுவதற்கு நாய் உதவியுள்ள சம்பவம் பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது.

காஷ்மீரில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையினால், ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது.

இதனால் ஜம்மு வழியாக செல்லும் அமர்நாத் யாத்திரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ராம்பன் மாவட்டத்தில் பன்தியால் பகுதியில் கனமழை காரணமாக திடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

அங்கு சென்ற பொலிசார் நிலச்சரிவு ஏற்பட்ட சாலையைச் சீர் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது ரிசர்வ் படை மோப்ப நாய் ஒன்று கடுமையாகக் குரைத்துள்ளது.

இதனால் அங்கு விரைந்து சென்று பொலிசார் பார்த்த போது, நிலச்சரிவில் சிக்கி ஒருவர் பூமிக்குள் புதைந்திருந்துள்ளார்.

அவர்கள் உடனடியாக அவர் இருந்த பகுதியை சுற்றிலும் தோண்டி அவரை உயிருடன் மீட்டுள்ளனர்.

இந்தக் காட்சிகள் தற்போது வைரலாகி வரும் நிலையில் சரியான நேரத்தில் மோப்பம் பிடித்து அவரை மீட்க உதவிய நாய்க்கு பாராட்டுகளும் குவிந்து வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers