இரயில் நிலையத்தில் நெருக்கமாக இருந்த காதல் ஜோடி: ஆபாச இணையதளத்தில் கசிந்த சிசிடிவி காட்சி

Report Print Arbin Arbin in இந்தியா
211Shares

டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் ஜோடி ஒன்று நெருக்கமாக இருந்த காட்சி தற்போது ஆபாச இணைய தளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய தலைநகர் டெல்லியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் ஜோடி ஒன்று நெருக்கமாக இருந்துள்ளது.

ஜூலை 18 ஆம் திகதி நடந்த இச்சம்பவம் மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு அறையில் இருந்த கண்காணிப்பு கெமராவில் பதிவாகியுள்ளது.

இந்த வீடியோவை அடையாளம் தெரியாத ஒருவர் தன்னுடைய மொபைலில் பதிவு செய்து அதை ஆபாச வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

குறித்த வீடியோ தற்போது 1 லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் டெல்லி மெட்ரோ ரயில் நிலைய அதிகாரி அனுஜ் தயா, டெல்லி காவல் நிலையத்தில் நடந்த இந்த விவாகரம் தொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பான அனைத்து தகவல்களையும் காவல்துறை அதிகாரிகளிடம் அளித்துள்ளோம். அவர்களுக்கு தேவையான ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த வீடியோவில் உள்ள ஜோடி யார் என்று இன்னும் தெரியவில்லை. அவர்கள் மீதும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

டெல்லி மெட்ரோவை பயன்படுத்தும் பயணிகள் இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்