முதல் கணவர் மூலம் குழந்தை! இரண்டாவது கணவர் செய்த மோசமான செயல்... வெளிநாட்டிலிருந்து கதறிய தமிழ்பெண்

Report Print Raju Raju in இந்தியா

தமிழ்நாட்டில் இரண்டாவது மனைவி குடும்பம் நடத்த வராததால் துப்பாக்கியை காட்டி வாட்ஸ்-அப்பில் மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வேலூர் மாவட்ட மக்களின் வாட்ஸ்-அப்பில் சில நாட்களாக துப்பாக்கி வைத்துக் கொண்டு ஒருவர் மிரட்டல் விடும் வீடியோ வெளியாகி வைரலானது.

அந்த வீடியோவில் பேசும் நபர் துப்பாக்கியை காட்டி, நான் பேச மாட்டேன். இந்த துப்பாக்கி தான் பேசும். நேரில் பார்த்தா, உடனே சுட்டுத்தள்ளிடுவேன் என்று தகாத வார்த்தைகளால் மிரட்டும் காட்சி இடம் பெற்றிருந்தது.

தொடர்ந்து அந்த வீடியோவில் பேசும் பெண், என்னுடைய பெயர் மலர். தற்போது சிங்கப்பூரில் வேலை செய்கிறேன். எனது சொந்த ஊர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு.

நான் 6 ஆண்டுகளுக்கு முன்பு 2-வது திருமணம் செய்து கொண்டேன். எனது முதல் கணவர் மூலம் ஒரு பெண் குழந்தை உள்ளது.

சிங்கப்பூரில் வேலை செய்தபோது விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தேன்.

அப்போதுதான் வேலூர் மாவட்டம் காட்பாடியை சேர்ந்த கபாலீஸ்வரனை 2-வது திருமணம் செய்து கொண்டேன். வேலூரில் 2 ஆண்டுகள் குடும்பம் நடத்தினேன். அப்போது அவர் என்னை மிகவும் கொடுமைப்படுத்தினார். எனவே அவருடன் வாழப்பிடிக்காமல் பிரிந்து விட்டேன்.

ஆனால் கபாலீஸ்வரன் எனக்கும், எனது மகளுக்கும் பல்வேறு வகையில் தொல்லை கொடுத்து வருகிறார். தினமும் வீடியோ கால் செய்து பாலியல் ரீதியாக பேசி தொந்தரவு செய்கிறார்.

என் பேஸ்புக் ஐடியை பயன்படுத்தி என் புகைப்படத்தை வெளியிட்டு ஒரு நாளைக்கு 5,000 என்று கூறி, எனது செல்போன் எண், மகள் எண்ணை போட்டுள்ளார்.

மேலும் அவர் துப்பாக்கியை காட்டி சுட்டு விடுவதாக மிரட்டும் வீடியோவை அனுப்பி உள்ளார், என்னை காப்பாற்றுங்கள் என்று கூறுவது போல வீடியோ உள்ளது.

இந்த வீடியோ குறித்து ஆய்வு செய்த பொலிசார் துப்பாக்கியை காட்டி மிரட்டல் விடுத்த வேலூரை சேர்ந்த கபாலீஸ்வரன் (45) என்பவரை கைது செய்தனர்.

விசாரணையில், கபாலீஸ்வரனின் முதல் மனைவி இறந்தநிலையில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு பேஸ்புக் மூலம் மலர் அறிமுகமானார்.

தொடர்ந்து இருவரும் காதலித்து 2-வதாக திருமணம் செய்து கொண்டனர்.

நாளடைவில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து, மலர் சிங்கப்பூருக்கு வேலைக்கு சென்றுள்ளார்.

ஆனாலும் கபாலீஸ்வரன் தொடர்ந்து துன்புறுத்தும் விதமாக செல்போன் மூலம் துப்பாக்கியை காட்டி மிரட்டி வீடியோ எடுத்து மலரின் வாட்ஸ்-அப்பிற்கு அனுப்பியது தெரியவந்தது.

அதையடுத்து பொலிசார் அவரிடம் இருந்து பொம்மை துப்பாக்கி, 2 கத்தி, 6 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்ததோடு அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த சூழலில் கபாலீஸ்வரன் மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசுகையில், என் மனைவி மலரை குடும்ப சூழ்நிலை காரணமாக பிரிந்து வாழ்கிறேன்.

அவர் வேலூருக்கு வரவேண்டும் என்பதால் மிரட்டினேன். அதுவும் அது பொம்மை துப்பாக்கி தான். பொதுமக்களுக்கு சிரமத்தை கொடுத்ததற்கு மன்னித்து விடுங்கள்.

நான் ரவுடி இல்லை, ஆனால் வீடியோவை பார்த்து விட்டு பொலிசார் என்னை கைது செய்துவிட்டனர் என பேசியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers