தற்கொலை செய்ததாக கருதப்பட்ட 17 வயது சிறுமி.. தோண்டி எடுக்கப்பட்ட உடல்... வெளியான அதிர்ச்சி உண்மை

Report Print Raju Raju in இந்தியா

தமிழ்நாட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாக கருதப்பட்ட பெண் கொலை செய்யப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கடலூரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மகள் வெண்மதி (17).

கடந்த மாதம் 17-ம் திகதி இவர் தனது வீட்டின் பின்புறம் உள்ள வேப்பமரத்தில் தூக்கில் பிணமாக தொங்கினார். அப்போது அவரது உடலில் இருந்த காயங்களை பார்த்த, அவரது பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

ஆனால், அங்கிருந்த சிலர், மரத்தில் தூக்கில் தொங்கியதால் அதில் உரசியதில் உடலில் காயம் ஏற்பட்டு இருப்பதாக கூறினர்.

இதை நம்பிய ஆறுமுகம் குடும்பத்தினர், வெண்மதி தற்கொலைதான் செய்து உள்ளார் என்று நினைத்து உடலை அடக்கம் செய்தனர்.

இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த 4 வாலிபர்கள் குடிபோதையில், வெண்மதியின் தங்கை லட்சுமியிடம் உன் அக்காவை கொலை செய்ததுபோல் உன்னையும் கொலை செய்து விடுவோம் என்று கூறி மிரட்டல் விடுத்தனர்.

இதுபற்றி அவர், தனது தந்தை ஆறுமுகத்திடம் கூறினார். இதனால் ஆறுமுகத்திற்கு மகள் இறப்பில் சந்தேகம் ஏற்பட்டு பொலிசில் புகார் அளித்தார்.

இதையடுத்து, பொலிசார் சுடுகாட்டில் புதைக்கப்பட்டிருந்த வெண்மதியின் உடலை தோண்டி பிரேத பரிசோதனை செய்து மீண்டும் புதைத்தனர்.

இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகிக்கப்படும் பிரசாந்த், விஜயகாந்த், விவேகானந்தன், இளையராஜா ஆகியோரை பிடித்து பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதில் பிரசாந்த் வெண்மதியின் உறவினர் ஆவார். இதனால் அவரை பிரசாந்த் ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. எனவே இதனடிப்படையில் வெண்மதி கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று பல்வேறு கோணங்களில் விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர்.

இதனிடையில் பிரேத பரிசோதனை முடிவுகள் வந்த பின்னர் உண்மை தெரியும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்