சொந்தமாக நிலம் கூட இல்லாத ஆசிரியர்.. வீட்டிற்கு ஹெலிகாப்டரில் பயணம்! வைரலாகும் வீடியோ

Report Print Kabilan in இந்தியா

இந்தியாவில் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர், தனது வீட்டிற்கு ஹெலிகாப்டரில் சென்ற வீடியோ வைரலாகியுள்ளது.

ஹரியானா மாநிலத்தில் நீம்கா என்ற அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் குரே ராம்(60). சத்புரா எனும் ஊரைச் சேர்ந்த இவர் 4ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் எடுத்து வந்தார்.

தான் ஓய்வு பெறும் நாளில், வீட்டிற்கு ஹெலிகாப்டரில் வர வேண்டும் என்பது குரே ராமின் விருப்பமாக இருந்துள்ளது. ஆனால், ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த அவருக்கு சொந்தமாக நிலம் கூட இல்லை.

இந்நிலையில், குரே ராமின் ஆசையை நிறைவேற்ற நினைத்த அவரது குடும்பத்தினர், 3 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பணத்தை திரட்டி, ஹெலிகாப்டர் ஒன்றை வாடகைக்கு எடுத்தனர்.

அதன் பின்னர், குரே ராம் தன் பள்ளியில் இருந்து இரண்டு கிலோ மீற்றர் தொலைவில் உள்ள சத்புரா கிராமத்திற்கு ஹெலிகாப்டரில் அழைத்து வரவப்பட்டார். தற்காலிக ஹெலிபேடு அமைக்கப்பட்ட இடத்தில் அவர் தரையிறங்கியபோது, கூடியிருந்த கிராம மக்கள் அவரை மேள தாளங்கலோடு உற்சாகமாக வரவேற்றனர்.

இதுதொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்