நாம் தமிழர் கட்சிக்கு இஸ்லாமியர்கள் ஓட்டு... பதறுகின்றனர்: சீமான் சொன்ன முக்கிய காரணம்

Report Print Santhan in இந்தியா

இஸ்லாமியர்கள் வாக்கு நாம் தமிழர் கட்சிக்கு விழுந்துவிடுமோ என்று திமுக மற்றும் அதிமுக பயப்படுவதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

தமிழகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேலூர் மக்களவை தேர்தல் வரும் 5-ஆம் திகதி நடைபெறுகிறது.

இதில் நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்கு சேகரித்தார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், முத்தலாக் விவகாரத்தில் திராவிட கட்சிகள் இரட்டை வேடம் போடுவதாகவும், முத்தலாக் மசோதாவை கொண்டு வருவதில் அதிமுக ஆதரிப்பதுபோல் ஆதரித்துவிட்டு, பின்னர் வேலூரில் இஸ்லாமிய வாக்குகளை கருத்தி கொண்டு மாநிலங்களவையில் மசோதாவை எதிர்த்ததாக சீமான் தெரிவித்தார்.

மேலும், நாடாளுமன்றத்தில் முத்தலாக் மசோதா மீதான வாக்கெடுப்பின் போது வெளிநடப்பு செய்யாமல் அதிமுக வாக்களித்திருந்தால் மசோதா நிறைவேறுவதை தடுத்திருக்கலாம், அதுமட்டுமின்றி இந்த விவகாரத்தினால் எங்கு இஸ்லாமியர்களின் ஓட்டு நாம் தமிழர் கட்சிக்கு விழுந்துவிடுமோ என்று திமுக மற்றும் அதிமுக பதறுவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்