தந்தையுடனான சந்திப்பில் கண்ணீர்விட்டு கதறியவர்... காபிடே சித்தார்த்தா மரணத்தில் மற்றும்மொரு சோகம்

Report Print Abisha in இந்தியா

காஃபே காபி டே நிறுவனர் சித்தார்தா மரணம் குறித்து அவரது தந்தை உயிரோடு இருந்தும் இன்னும் அவருக்கு தெரியவில்லை

இரண்டு நாட்களாக அனைவராலும் பேசப்பட்ட காஃபே காபிடே நிறுவனரின் தற்கொலைக்கு முன் நிகழ்ந்த சம்பவங்கள் தற்போது தெரியவந்துள்ளது. அதிலும் குறிப்பாக சித்தார்த்தா தனது தந்தையை சந்தித்த நிகழ்வு.

முதுமையின் காரணமாக கோமா நிலையில் உயிருக்குப் போராடிவரும் சித்தர்தாவின் தந்தை கங்கையன். 15 நாள்களுக்கு முன்புதான், இதற்காக மைசூருவில் உள்ள உறவினர் மருத்துவமனையில் தந்தையை அனுமதித்துள்ளார், சித்தார்த்தா.

கடைநிலை ஊழியர்கள் முதல் அனைவரிடமும் சித்தார்த்தா அன்பாகப் பழகுகிறார் என்றால் அதற்குக் காரணம், அவரது தந்தை கங்கையாதான். குழந்தையாக இருந்தது முதல் ஒவ்வொரு நல்ல விஷயத்தையும் தனது தந்தையிடம் இருந்தே கற்றுக்கொண்டிருக்கிறார். அதற்கேற்றாற் போலவே நிறைய சாதனைகளைச் செய்து, தனது தந்தையை பெருமைப்படுத்தினார் சித்தார்த்தா.

ஆனால், மகனின் மரணம் குறித்துத் தெரியாமலும், அவரின் இறுதிச்சடங்கில் கங்கையாவால் பங்கேற்க முடியாததும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவர் காணாமல் போன தினத்திற்கும், மூன்று தினங்களுக்கு முன்பு கூட தந்தையை காண மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அன்று தந்தையின் உடல்நிலை மோசமடைந்திருப்பதை பார்த்து கண்ணீர்விட்டு அழுதிருக்கிறார் சித்தர்த்தா.

இது குறித்து பேசிய உறவினர் ஒருவர், இதுதான் தந்தை மகனின் கடைசி சந்திப்பு என்று நினைக்கவில்லை என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்