சிதறி கிடந்த ஆணுறைகள்! சிவக்குமாரை கொடூரமாக கொன்றது ஏன்? சரத்குமாரின் அதிரவைத்த வாக்குமூலம்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் 15 வயது சிறுவன் காட்டுப்பகுதியில் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அயன் குஞ்சரம் கிராமத்தை சேர்ந்தவர் கேசவன். இவர் வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறார். அவரது மனைவி பராசக்தி. இந்த தம்பதிக்கு சரத்குமார் மற்றும் சிவக்குமார் (15). என இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

சிவக்குமார் சில தினங்களுக்கு முன்னர் விளையாட வெளியில் போன நிலையில் பின்னர் வீடு திரும்பவில்லை.

இதனால் வீட்டில் உள்ளவர்கள் அவனை பல இடங்களில் தேடிய நிலையில் இறுதியாக அங்குள்ள வனப்பகுதியான காப்புக்காடு என்ற இடத்தில் சிவக்குமார் நள்ளிரவில் சடலமாக கண்டெடுக்கப்பட்டான்.

அவன் கழுத்தறுத்து மிக கொடூரமாக கொல்லப்பட்டது தெரியவந்தது. சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் விசாரணை நடத்தினார்கள்.

அப்போது கொலை நடந்த காட்டுப் பகுதிக்கு சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த சிலர் அழகிகளை அடிக்கடி கூட்டி வந்து ஜாலியாக இருப்பார்களாம். சம்பவத்தன்று கூட யாரோ பெண்களை கூட்டி வந்து உல்லாசமாக இருந்துள்ளனர்.

இதனை சிவக்குமார் நேரில் பார்த்த நிலையில் ஊருக்குள் போய் சொல்லிவிடுவான் என நினைத்து அவனை சிலர் கொலை செய்ததாக கூறப்பட்டது.

ஆனால் இந்த சம்பவத்தில் திடுக்கிடும் திருப்பமாக சிவக்குமாரின் அண்ணன் சரத்குமாரே தம்பியை கொன்றது தெரியவந்துள்ளது.

அதாவது கொலை வழக்கை கண்டுபிடிக்க வந்த மோப்ப நாய் சிவக்குமார் வீட்டில் நின்றுள்ளது, இதையடுத்து பொலிசார் வீட்டில் உள்ளவர்கள் மீது சந்தேகப்பட்டு விசாரித்த நிலையிலேயே சரத்குமார் சிக்கியுள்ளான்.

அவன் அளித்த வாக்குமூலத்தில், எனக்கும் என் தம்பிக்கும் வீட்டில் அடிக்கடி சண்டை வரும். சம்பவத்தன்றும் அப்படித் தான் சண்டை வந்தது. அதனால் அவனை கொல்ல முடிவு செய்தேன்.

இந்நிலையில் சம்பவத்தன்று இருவரும் சேர்ந்து முயல் வேட்டைக்கு சென்றோம்.

அங்கு முயலை கொல்ல சிவக்குமார் கண்ணி வைக்குபோது கத்தியால் குத்தி அவனை கொன்றுவிட்டேன் என கூறியுள்ளான்.

இதையடுத்து பொலிசார் சரத்குமாரை கைது செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers