இரயில் நிலையத்தில் தாயாருடன் படுத்திருந்த குழந்தையை கடத்தி கொடூர கொலை: இளைஞரின் பகீர் வாக்குமூலம்

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவில் ரயில் நிலையம் ஒன்றில் உறங்கிக் கொண்டிருந்த 3 வயது குழந்தையை கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்த 3 பேர், பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜார்காண்ட் மாநிலத்தின் ஜாம்ஷெட்பூரில் ரெயில்வே பிளாட்பாரத்தில் கடந்தவாரம் தாயுடன் தூங்கிக் கொண்டிருந்த 3 வயது பெண் குழந்தை காணாமல் போனது.

இரவு முழுவதும் தேடியும் குழந்தை கிடைக்கவில்லை. மறுநாள் காலை குழந்தையின் தாய் இந்த விவகாரம் தொடர்பில் பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார்.

இதில், அந்த பெண் தனது நண்பர் ஒருவரை சந்தேகிப்பதாகவும் தெரிவித்தார். இதையடுத்து பொலிசார் குழந்தை காணாமல் போன அன்று இருந்த சிசிடிவி காட்சிகளை பார்வையிட்டுள்ளனர்.

இதில், ஒரு நபர் தனது கைகளில் தூங்கும் குழந்தையுடன் நடந்து செல்வது கண்டறியப்பட்டது. இந்த சிசிடிவி காட்சிகளின் உதவியோடு, பொலிசார் குற்றவாளிகளை கண்டறிந்தனர்.

இது குறித்து வெளியான தகவலில், 'சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இருவர் மற்றும் அப்பெண் சந்தேகித்த நபர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரெயில் நிலையத்திலிருந்து நான்கு கி.மீ தூரத்தில் சேரிகளுக்கு அருகே புதருக்கு பின்னால் இருந்த பிளாஸ்டிக் பையில் குழந்தையின் சிதைந்த உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

குற்றவாளிகள் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த பின்னர் கழுத்தை நெரித்து பின் தலையை துண்டித்ததாக ஒப்புக் கொண்டனர்.

குழந்தையின் தலையை கண்டுபிடிக்கும் பணியில் மோப்ப நாய்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், தலை இன்னும் கிடைக்கவில்லை' என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்