நீ அழகாக இல்லை என சித்திரவதை.. கணவன் மற்றும் மாமனாரின் மோசமான செயலால் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் வரதட்சணை கொடுமையால் தீக்குளித்த இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

திருவாரூர் அருகே மருதப்பட்டிணம் பகுதியைச் சேர்ந்த அருண் என்பவர், கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு மைதிலி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருணம் நடந்த சில மாதங்களுக்குப் பிறகு மைதிலியை தொடர்ந்து வரதட்சணை கேட்டு அவருடைய கணவர் அருணும், மாமனார் இளங்கோவும் மாமியார் சுபாவும் கொடுமைபடுத்தி வந்துள்ளனர்.

மேலும் மைதிலி அழகாக இல்லை என அவர்கள், அவர் மனதை புண்படுத்தும் விதத்தில் பேசி வந்தனர்.

இதனால் விரக்தியடைந்த மைதிலி கடந்த மாதம் 26 ஆம் திகதி அதிகாலை, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். தகவலறிந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மைதிலி போராடி வந்தார்.

இதனிடையே வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால், தான் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்தார்.

அதனடிப்படையில் கணவர் அருண், மாமனார் இளங்கோ ஆகியோரை பொலிசார் கைது செய்துள்ளனர். இந்த சூழலில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மைதிலி சிகிச்சை பலனின்றி மைதிலி உயிரிழந்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்